நன்றி உனக்கு …!

ஓயாத அலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நன்றி உனக்கு …!

நேற்றெந்தன் அகவையில
நேர் வந்த இளங்கிளியே
நீயுரைத்த வாழ்த்தொன்றால்
நிமிடங்கள் பேசுதடி

நாள் தோறும் அகவையில
நீ வந்து வாழ்த்திவிடு
நான் வாழ நீ தானே
நலமுடனே வாழ்த்து இடு

உன்போல உறவொன்றை
உயிரே நான் காணவில்லை
உள்ளத்தில் நீ இருக்க
ஊந்துகணை பயமில்லை

கரை பதிந்த அலை தடத்தை
காற்றே அழித்திடுமோ ..?
காயா நினைவலையை
கறையான் புற்று அரித்திடுமோ …?

ஓயாத அலை ஒன்றாய்
ஒலிக்கின்றாய் நெஞ்சுக்குள்
வரலாற்று சமரதுவாய்
வாழ்கின்றாய் நெஞ்சுக்குள்

குடாரப்பு தரையிறக்கம்
குழி தோண்டிய முற்றுகையாய்
வெறி கொண்ட வெற்றி ஒன்றாய்
வெளிச்சத்தை நீ தந்தாய் …!

  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம்-11-03-2021

Author: நிருபர் காவலன்