இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரனோ தடுப்பூசி பிரிட்டனில் மக்களுக்கு சோதனை மாற்று திட்ட நகர்வின் முன்னோடியாக இந்த மருந்து மக்களும் முன் வருகிறது கொரனோ தடுப்பூசி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை

பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Author: நிருபர் காவலன்