இறந்தால் உன்னை மறப்பேன் …!

இறந்தால் உன்னை மறப்பேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இறந்தால் உன்னை மறப்பேன் …!

நினைத்து நினைத்து உருகிடத்தான்
நீ வந்து போகிறாய்- உன்
நினைவுகளை தந்து விட்டு
நிதம் ஏனோ மறைகின்றாய்..?

ஆழ் மனதில் நீயிருக்க
அன்பே உனை மறப்பேனா
அடியே உனை மறந்தால்
ஆவி உடல் தங்குமா ?

நீயெடுத்த முடிவொன்றால்
நிகழ் காலம் இதுவாச்சு
ஏதெடுத்து உனை மொழிவேன்
எப்படி உனை உமிழ்வேன்

காதோரம் செய்திகளை
காதலியே சொல்லிட வா— நான்
காணாமல் போகு முன்னே
கதை ஒண்ணு சொல்லிட வா

உருமாறும் அகவையில
உள்ளத்தை மாற்றிட வா
உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
உண்மையை ஏற்றிடவா

எதை உரைத்தும் இன்றென்ன
எனக்கில்லை நீதானே
எதை விதைத்தும் இன்றென்ன
எல்லாமே வீன்தானே

இருவருக்கும் இடையிலின்று
இடையே ஒர் வேலியிட்டாய்
இரு வேறாய் பிரிவதற்கா
இடையில் ஒரு பதி வைத்தாய்?

இதயத்தை சலவை செய்ய
இன்றென்னால் முடியாது
இறந்தால் உனை தொடரேன்
இதயமே வருந்தாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -10-03-2021


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்