தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா

தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான

ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று காலை 6 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்

இங்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதியு அவருடைய கனிவான

நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்திற்கான அவருடை ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

கொவிட் – 19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் முப்படை பணியாளர்களுக்கு ஏற்றுவதற்காக பிரத்தியேகமாக மற்றுமொரு

தொகை தடுப்பூசி தொகையை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துடன், இந்த விவகாரத்தில் அவர்

அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புளைகளுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Spread the love

Author: நிருபர் காவலன்