வவவுனியாவில் வயலுக்குள்சிறுவன் சடலம் – கண்ணீரில் உறவுகள்

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிஸார் நேற்று (4) மீட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில்

குறித்தஉபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.உஎனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.

இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னமே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7 வயது சிறுவனே மரணமடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Spread the love

Author: நிருபர் காவலன்