நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

ஒத்தையில நீ தனித்து
ஒடிந்துருகி போனவளே
நித்தம் பல கோயில் ஏறி
நின்று வரம் பெற்றவளே

மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
மூழ்கி விழி போனதடி
அல்லும் பகல் வாயில் வந்து
அறம் பேசி நிற்பவளே

உந்தன் துயர் பாடும் நிலை
உயிர் விட்டு தந்ததென்ன
நெஞ்சுருகி நாம் கதறும்
நிலை இன்று வைத்த தென்ன

ஒத்த பிள்ளை பெற்றவளே
ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
பெற்றவளே உனையிழந்து
பேரன்பு கதறுதடி

அன்புருகி பேசி நிதம்
ஆறுதல் சொல்பவளே
நெஞ்சிளகி நாம் வாழ
நீ வந்து பேசாயோ ..?

முன் தினத்தில் கோழிக்கறி
முழு சமையல் செய்தவளே
அன்புருகும் பிள்ளாய்க்கு
ஆக்கி நன்றே தந்தவளே

இன்று அதை எண்ணி எண்ணி
இதயமுடைந்து அழுகிறானே
பெற்றவளே உனையிழந்து
பெரும் துயரில் தவிக்கிறானே

சோதனைகள் ஆயிரமாம்
சோடனையாய் தூவையிலும்
அவை எல்லாம் நெஞ்சடக்கி
அமைதியாய் நடந்தவளே

நீ வீழ்ந்த செய்தி இன்று
நெஞ்சில் துயர் தந்ததம்மா
இன்று வரை உன் இறப்பை
நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!

மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..

-வன்னி மைந்தன்-(ஜெகன் )

ஆக்கம் -03-03-2021

நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
Spread the love

Author: நிருபர் காவலன்