முத்தமழை பொழிந்த காதல் ஜோடிகள்

காதலர் தினத்தையொட்டி கடந்த 14-ந் தேதி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் பஸ் நிலையத்தில் ஒரு காதல் ஜோடி

முத்தமழை பொழிந்ததுடன் அத்துமீறி நடந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

தற்போது மீண்டும் இளம்ஜோடி முத்தமழை பொழிந்த சம்பவம் நடந்தது. அதாவது ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் பஸ்

நிலையத்திற்கு நேற்று ஒரு இளம் ஜோடி வந்தது. அவர்கள் சிறிது நேரம் பஸ் நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி முத்தமழை பொழிந்தனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் எல்லை மீறிய செயலில் ஈடுபட்டனர். இதனை கண்டு பஸ் நிலையம் வந்த பயணிகள் அதிர்ச்சி

அடைந்தனர். ஆனால் இளம் ஜோடி முத்த மழை பொழிந்த காட்சியை யாரோ செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக

வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது

.

Spread the love

Author: நிருபர் காவலன்