19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்

இஸ்ரோ சார்பில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்

இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 59வது ராக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த ஏற்பாடு

செய்யப்பட்டது. கல்விசார் மற்றும் வர்த்தக ரீதியிலான 19 செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் இணைக்கப்பட்டு, ராக்கெட்டை ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு காலை 10:24 மணிக்கு ராக்கெட் விண்ணில் சிறிப்பாய்ந்தது. ராக்கெட் சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும், செயற்கைக்கோள்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, அவற்றின் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

ஏவுதளத்தில் ராக்கெட்

இது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிகரீதியாக செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக் கோள்களில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா, பிரேசில் நாட்டுக்கு சொந்தமானது. இது 637 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். புவி ஆய்வு, அமேசான் காடுகள் கண்காணிப்பு இதன் முக்கிய பணி ஆகும்.

இதுதவிர, இஸ்ரோவின் சிந்துநேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் தவான் சாட், உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 5 செயற்கைக் கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக, ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை ஊடகங்கள், பொதுமக்கள் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கப்படலை. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Author: நிருபர் காவலன்