லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது

லண்டன் பொலிஸ்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது

லண்டன் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பொழுது நூறு பேர் கைது

செய்யப் பட்டுள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ,மற்றும் 82 கைபேசிகள் ,ஒருமில்லியன் பவுண்டுகள் பெறுமதியான

போதைவஸ்து ,53 ஆயிரம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டுள்ளது

கைதானவர்களில் 13 பெண்களும் உள்ளடங்குவார்கள் ,இதில் 12

பேர் ,பதினெட்டு வயதுக்கும் உட் பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கொரனோ லொக்கடவுன் காலத்தில் போதைவஸ்து குழுவை

இலக்கு வைத்து போலீசார் நடத்திய தேடுதலில் பலநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்