இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

இறுதிப்போர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

புலிகள் மீது குற்ற சாட்டு

அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

இந்தியாவை அடக்கும் தந்திரம்

இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

மாறாத இந்தியா புலிகள் நிலை

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

மாறும் உலக அரசியல்

இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

நீதி நிலை நாட்டும் ஐநா ..?

ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

– வன்னி மைந்தன் –

Author: நிருபர் காவலன்