முடிந்தால் அடக்கு

முடிந்தால் அடக்கு …!

அடக்கு முறை இங்கு வெடிக்குதடா
அடக்க என்னை துடிக்குதுடா
மிதித்தால் எழுத்து அடங்குமோ ..?
மிதவாத கால் பணியுமோ ..?

பெண்ணுடன் ஒரு சிங்கமாம்
புனைந்ததால் ஒரு வம்சமாம்
ஆளுது அங்கொரு நாடடா
அதனால் தினம் தொல்லைடா

அஞ்சி பாதம் வீழ்வதோ
அடிமையாய் யான் மாய்வதோ
கெஞ்சி விழும் நிலையிலே
கேடு கெட்டு வாழ்வதோ

கொஞ்சி தமிழ் பேசிடும்
கொள்கை மண்ணில் வீழுமோ ..?
அஞ்சிடாத புலியவன்
ஆண்ட மண் பரம்பரை

செய்தவன் கொலை காலிலே
செந்தமிழ் இன்று வீழ்வதோ ..?
உண்மை மறைத்து உலகிலே
ஊடகத்தை ஆள்வதோ ..?

செவந்து குருதி ஓடலாம் – மண்ணில்
செத்தே இன்று வீழலாம்
கொத்து கொத்தாய் கொன்றவன்
கொலை காலிலே வீழ்ந்திடேன்

முகநூலை முடக்க துடிக்கிறாய்
,முடக்கு முடக்கு போகிறேன்
நேரம் கொஞ்சம் மிஞ்சிடும்
நேர்த்தி பொங்கி எழுந்திடும்

ஏதும் இல்லா காலத்தில்
எழுந்து நாம் நடந்தவர்
ஏது இங்கு வேணுமோ
எழுதினேன் இழுத்து முடக்கு

எதிரி எனக்கு இருக்கு
எதிரி யான் உனக்கு
எரியும் இனி விளக்கு
எழுதுறேன் இனி உழக்கு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-02-2021
முகநூலை நிரந்தரமாக முடக்குவதாக இப்போது செய்தி வந்த போது –

Spread the love

Author: நிருபர் காவலன்