மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு

அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்

தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு

கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன

உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு

ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை

,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை

அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச

விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்

46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி

தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது

பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்

தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு

தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது

தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட

அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண

தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?

இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது

இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?

  • வன்னி மைந்தன் –
Spread the love

Author: நிருபர் காவலன்