ரசிகர்களை சந்தித்த விஜய்

ரசிகர்களை சந்தித்த விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில்

தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள்

இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள்

இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில்,

நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.

விஜய்

விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.

Spread the love

Author: நிருபர் காவலன்