நடிகர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவதஸ்வ்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நடிகர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் கவுதம் மேனன் இயக்கத்தில்

வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் சினிமாவில்

அறிமுகமானார். அதை தொடர்ந்து யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி

வரும் ‘வல்லமை தாரோயா’ என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர்,

அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால்

ஸ்ரீவதஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம். இதனால்

அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஸ்ரீவதஸ்வ் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு

வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால் அவருடைய குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில

நாட்களாகவே அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.

Author: நிருபர் காவலன்