உன்னால் தவிக்கிறேன் …!

உன்னால் தவிக்கிறேன் …!

சாயம் பூசி இன்றெந்த
சண்டைக்களம் போகிறாய் …?
உன் உதட்டை காட்டியேன்
உலக யுத்தம் மூட்டிறாய் …?

பாரத போர் ஒன்றை
பாவை நீ மூட்டாதே
முன் பகலை இரவாக்க
முழுமதியே வைக்காதே

பேரழகே முன் வந்தால்
கார் மேகம் கூடாதோ …?
முன்னே இடி மின்னல்
முட்டி மோதாதோ ..?

கட்டி கை கட்டி
கண்ணே என்ன பார்க்கிறாய் ..?
தோள் சாயும் கூந்தலில
தொங்க விட்டேன் போகிறாய் …?

ஏக்க பார்வையிலே
என்னை தானே தேடுறாய் …?
உன்னழகை பருகிடவோ
உள்ளமே வாடுறாய் …?

விழிமேலே இமை வைத்து
விடயத்தை அளக்கிறாய்
உயிர்மேலே எனை வைத்து
உள்ளமே அழைக்கிறாய்

கொஞ்சும் உந்தன் பேரழகு – என்
உயிரை வாட்டுதடி
கரும் சட்டை காவியமே
கண்ணுறக்கம் தொலையுதடி …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 24-01-2021

உன்னால் தவிக்கிறேன்
உன்னால் தவிக்கிறேன்
Spread the love

Author: நிருபர் காவலன்