உன்னை தா உயிரே …!

உன்னை தா உயிரே …!

ஏக்கம் வந்து மனதை தாக்க
ஏனோ உன்னை தேடுது
ஆக்கம் வந்து உன்னில் வாங்க
அன்பை தானே பொழியுது

உந்தன் மொழி காதில் வீழ்ந்தால்
உள்ளம் ஏறி ஆடும்
உலகாளும் கோமகனாய்
உள்ளம் ஏறி பாடும்

அருகினில நீ இருந்தால்
அந்தி வானம் சிரிக்கும்
ஆடை எடுத்து வான் மறைத்து
அது உறக்கம் போடும்

வாழ்க்கை என்ற வட்டத்திலே
வாழ்வு ஒரு சருகு
ஆக்கம் பெற்று முடிந்து விட்டால்
அன்று பொழுது மகிழ்வு

கொஞ்ச நேரம் தழுவையில
கொடும் துயரும் பறக்கும்
அந்த நேரம் மட்டும் தானே
ஆனந்தமே சிறக்கும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-01-2021

உன்னை தா உயிரே
உன்னை தா உயிரே
Spread the love

Author: நிருபர் காவலன்