நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

முதல்வரிடம் நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்
விஜய்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலை மாற்றி 100 சதவீத

இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில்,

பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால்,

திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும்,

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர்

. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Spread the love

Author: நிருபர் காவலன்