எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்

ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்

லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை

50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Spread the love

Author: நிருபர் காவலன்