மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு

ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர்.

பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர்,

உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர்.நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமது உரிமைகளுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த முடியாத சவாலான நிலையினை தாயக தமிழர்கள் சிறிலங்கா ஆட்சியாளாகளினால் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொதுஇடங்களில் ஒன்றுகூடமுடியாத அவசரகால சுகாதார நெருக்கடி நிலை புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக இணையவழி தொழில்நுட்ப மூலமாக மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் தொடங்கினர்.

தியாகம், ஒழுக்கம், வீரம், அர்ப்பணிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இளந்தலைமுறையினரின் மாவீரர் வார நிகழ்வுகளை ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிக்கு நேரஞ்சலாக காணமுடியும். ( live on : https://tgte.tv/ , https://www.facebook.com/tgteofficial

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்ததலைமுறையாக விளங்கும் ‘அலைகள்’ இதனை முன்னெடுத்து வருவதோடு, பெண்களே முன்னின்று இதனை செயலாற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது..

Author: நிருபர் காவலன்