வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு

வலிமை’க்காக உடல் எடையை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு

வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு
அஜித்


நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக

இது தயாராகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதமாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த மாதம்

சென்னையில் மீண்டும் தொடங்கியது. இதில் அஜித் தவிர்த்து இதர நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

ரசிகருடன் அஜித்

இந்நிலையில், தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்

மெலிந்த தோற்றத்தில் உள்ளார். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தவாரே தீவிரமாக உடற்பயிற்சி செய்து அஜித் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.

Author: நிருபர் காவலன்