உனக்காக காத்திருக்கேன் …!

உனக்காக காத்திருக்கேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உனக்காக காத்திருக்கேன் …!

காந்த கண் பேரழகி
என்னை கவரந்தாய் நீ அழகி
உன் உதட்டை நான் மெழுக
உரிமத்தை தாராயா …?

அம்மியில நீ அரைக்க
ஆடி இடுப்பாட
என் மனசு கரையுதடி
என் வயது கொதிக்குதடி

குதிரை நடை பிடித்து
குமரி நீ போகையில
ஆகாயம் இடியுதடி
அகிலம் நடுங்குதடி

தொடை காட்டி நீ போக
தெரு நாய்கள் வழிமறிக்க
சிரித்து போறவளே
சிங்காரி நீ தாண்டி

உண்மை சொல்லிடவா
உள்ளத்தை தொலைத்தேண்டி
தேதி ஒன்று தருவாயா
தேறி நான் உறங்க …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -27-10-2020

Author: நிருபர் காவலன்