அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

சூறாவளி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19 ஆம்

திகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர

பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு

மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி,

நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) மத்திய

கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி

நகரக்கூடும்.என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்