வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்

வீடு திரும்பிய தமன்னா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்

முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.

வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
தமன்னா


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை” எனக்கூறியிருந்தார்.

இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர்

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

தமன்னா

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு

வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு

வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடு திரும்பிய தமன்னா
வீடு திரும்பிய தமன்னா

Author: நிருபர் காவலன்