காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்

ஊரடங்கு சட்ட விரோதம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்

ஹட்டன்-நுவரெலியா வீதி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருக்கும் காணியை அபகரித்தமை தொடர்பிலான விவகாரம் தொடர்பில், ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு

விடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு அமைவாக, இராணுவ அதிகாரிகள் பலர், நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜராகியிருந்தனர்.

இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, உள்ளிட்ட அப்படையணியின் கேர்ணல்கள் இருவரும் இன்னும் சில அதிகாரிகளும் நீதிமன்றத்தில்

ஆஜராகியிருந்தனர். அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரும் ஆஜராகியிருந்தனர்.

மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி, முன்னிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது,

செப்டெம்பர் 15ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டு, வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலுள்ள காணியை இராணுவத்தினர் கையகப்படுத்திவிட்டனர். அத்துடன்,

அக்காணியிலிருந்த சில கட்டடங்களையும் ஆக்கிரமித்துவிட்டனரென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் போது, தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்களாக மாற்றுவதற்காக, நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டது. ஜூலை மாதம் வரை

மட்டுமே தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்குமென அறிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவ வீரர்களை அங்கு

நிலைநிறுத்தியது மற்றும் கட்டடங்களை இராணுவ முகாமாக மாற்றிவிட்டதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் வாடிக்கையாளர், 50 வருட காலத்துக்கு அந்த நிலத்தை வைத்திருக்கிறார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, அந்த நிலத்தை அந்த வாடிக்கையாளரிடமே ஒப்படைக்குமாறு, மனுவின் ஊடாக கோரியிருந்தார்.

இந்த வழக்கில், இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 58 பேர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வாறான வழக்கொன்று இராணுவத்தினரால் இம்மாதிரியான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாதென

இராணுவத்தின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரன்ன, இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணிகள், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, வழக்கின் பிரதிவாதிகளா குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பை,

எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு கோரி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு வழக்கை, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி ஒத்திவைத்தார்.

Author: நிருபர் காவலன்