இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

நிலநடுக்கம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

மகாவலி நீர்த்தேக்க பகுதியில், எதிர்வரும் காலங்களில் சிறிய, சிறிய நிலநடுக்கங்கள், குறுகிய காலத்துக்குள் ஏற்படக்கூடுமென ​

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் சி.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

இத்தகைய அதிர்ச்சிகள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அழுத்தம் அல்லது நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு

கற்பாறைகளின் வெடிப்பால் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நீர்த்தேக்கத்தின் நீர் அதிகரித்து, குறைவடையும் போது

இவ்வாறான அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமென பேராசிரியர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

“ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவும் அதன்பின்னர் அவ்வப்போது, விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பிரதேசத்தங்களில் 2

ரிக்டருக்கு குறைவான அலகில், பூமியதிர்ச்சி பதிவாகியிருந்தது. இது, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு கீழே மையப்பகுதியில்

ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றார்.

“பாறைகளில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்து, கூடும். அதுவே, கண்டியில் ஏற்பட்டிருந்த இரண்டு, பூமியதிர்வுகளுக்கும் காரணமாக

அமைந்திருந்தது. இதனை சிறிய விடயமெனக் கருதி, நிராகரித்துவிடக்கூடாது. விக்டோரியா, ரத்தெனிகல, ரத்டெம்பே

ஆகிய நீர்த்தேக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞைக் கருவி தொகுதிகளிலும் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது” என்றார்

Author: நிருபர் காவலன்