காதலனுக்கு அசீட் வீசிய காதலி – காதல் செய்த கோலம்

அசீட் வீசிய
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காதலனுக்கு அசீட் வீசிய காதலி – காதல் செய்த கோலம்

ஆந்திராவில் மூன்றாண்டு காதலை முறித்துக் கொண்டு வேறொரு பெண்ணை மணமுடித்த காதலர் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேறொரு பெண்ணுடன் திருமணம் – காதலர் மீது ஆசிட் வீச்சு
ஆசிட்
அமராவதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் பெட்ட கொட்டலா கிராமத்தில் வசித்து வருபவர் நாகேந்திரா. அங்குள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சுப்ரியா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் நீடித்து வந்தது. அவர்கள் திருமணம் செய்து

கொள்ள முடிவு செய்தனர். இருவரும் வேறு, வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரின் பெற்றோரும் இதற்கு சம்மதிக்கவில்லை.

இதற்கிடையே, நாகேந்திரா கடந்த மாதம் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.


இதுபற்றி அறிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, நாகேந்திராவின் மீது நேற்று அமிலம் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த

நாகேந்திரா சிகிச்சைக்காக நந்தியால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் நாகேந்திராவிடம் விசாரித்ததில், சுப்ரியாவிடம் கலந்து பேசிய பின்னரே மற்றொரு பெண்ணை

திருமணம் செய்து கொண்டேன். இது தன் மீது நடந்த 2-வது தாக்குதல் முயற்சி என அவர் கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து, பிரிந்து செல்வது என்ற முடிவை எடுத்தோம். இதற்காக என்னிடம் இருந்து சுப்ரியா பணமும் பெற்றுக்கொண்டார்

என நாகேந்திரா கூறியுள்ளார். எனினும், குற்றவாளி தரப்பு வாதம் பற்றி அறிவதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author: நிருபர் காவலன்