105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை

105 கிலோமீட்டர் சைக்கிள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை

மத்திய பிரதேசம் அருகே மகனை தேர்வு மையத்துக்கு அழைத்து செல்ல தந்தை 105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

105 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை


தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துவந்த தந்தை
நான் எனது மகனை சைக்கிளில் அழைத்து வந்திருக்காவிட்டால்

அவனது படிப்பு ஒரு வருடம் வீணாகியிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் சோப்ராம்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோப்ராம் என்பவர் தேர்வு மையத்துக்கு தனது மகனை 105 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உளளது. அந்த

மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உளள பைதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் சோப்ராம் (வயது 38). இவரது மகன் ஆ‌ஷி‌‌ஷ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வை எழுத ஆ‌ஷி‌‌ஷ் விண்ணப்பித்து இருந்தார். அவனுக்கு பைதிபூர் கிராமத்தில் இருந்து 105 கி.மீ. தொலைவில் உளள தார்

நகரத்தில் அமைந்துள்ள பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து முடக்கம்,

வாடகை வாகனம் பிடித்து செல்ல கையில் போதிய பணமின்மை காரணமாக மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது சைக்கிளிலேயே அழைத்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி கடந்த திங்கட்கிழமை மகனுடன் தனது பயணத்தை தொடங்கிய சோப்ராம், உடல் அலுப்பு, சோர்வையும்

பொருட்படுத்தாமல் சைக்கிள் மூலம் நேற்று முன்தினம் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்தை வந்தடைந்து மகனை தேர்வு எழுத வைத்திருக்கிறார்.

பிடிஐ செய்தியாளர் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு ”நான் எனது மகனை சைக்கிளில் அழைத்து வந்திருக்காவிட்டால் அவனது படிப்பு ஒரு வருடம் வீணாகியிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

105 கிலோமீட்டர் சைக்கிள்
105 கிலோமீட்டர் சைக்கிள்

Author: நிருபர் காவலன்