பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

பெண்களே காபி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும்

முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல

காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.

பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச்

சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். “அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம்

உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின்

அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான

பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை

தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள்

ஏற்படும். “காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது

இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.

Author: நிருபர் காவலன்