தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி

வனிதா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி

தப்ப நீங்க பண்ணா சரியாகிடுமா என்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி
வனிதா – சனம் ஷெட்டி


நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சித்தார்கள். தனது சொந்த வாழ்க்கையில்

தலையிட வேண்டாம் என்று நடிகை வனிதா கூறி வந்தார். இது நாளடைவில் பெரிய விவாதமாக மாறியது. சமூக வலைத்தளத்தில்

வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் சண்டைப் போட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில், வனிதாவிற்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. அதில், வனிமா உங்களுடைய சமீபத்தில் வீடியோ

பார்த்தேன். அதில் நீங்கள் பேசியது தவறு. எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது நீங்கள் குரல் கொடுத்தீர்கள். இப்போ தப்ப நீங்க

பண்ணா சரியாகிவிடுமா என்று கேள்விக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

மேலும் பீட்டர் பாலின் மனைவிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகு

நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள் என்றும் வீடியோவில் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

Author: நிருபர் காவலன்