கொலையான பூ …!

கொலையான பூ …!

சின்ன சிரிப்பழகி
சிவந்த உடல் அழகி
ஆளுமை பேரழகை
அவனியில் இழந்தோமே

பெற்ற தாயவளே
பெரும் துயர் தந்திடவே
கண்ணீர் உடைகிறது
கத்தி விழி அழுகிறது

ஒப்பாரி சத்தங்கள்
ஓயா ஒலிக்கிறது
வேரை அறுத்த செயல்
வேதனை கொதிக்கிறது

தப்பான சிந்தையால்
தவறாகி போனது
அப்பாக்கள் உழைப்பெல்லாம்
அலங்கோலம் ஆனது

என்ன நினைத்தாளோ ..
ஏன் இதை செய்தாளோ ..?
தாங்கி பெற்றவளோ
தாயே எமன் ஆனாள்

நெருக்கடி உனை வாட்ட
நொறுங்கி நீ வாட
கொங்கை பால் தந்தாள்
கொலையது செய்தாளோ …?

வன்னி மைந்தன்( ஜெகன் )
ஆக்கம் -01-07-2020

லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
Spread the love

Author: நிருபர் காவலன்