வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி

வெடித்து சிதறிய மருத்துவமனை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி

ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி

ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி
வெடி விபத்து ஏற்பட்ட மருத்துவமனை
தெஹ்ரான்:

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்

வெளியாகி வருகின்றன. இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

இந்த கோர சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள்

சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது.

இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

வெடித்து சிதறிய மருத்துவமனை
வெடித்து சிதறிய மருத்துவமனை

Author: நிருபர் காவலன்