உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

விழுந்து விழுந்து எழ வேண்டும்
விடுதலை அதிலே பெற வேண்டும்
தோல்வி சுற்றி படராது
தோல்விக்கு அச்சம் தொடராது

முடியும் என்று முன்னேறு
முடிவு எழுதும் வரலாறு
விழியில் நீரை சுமந்து
விழுந்து அழுதல் கூடாது

வலியை கண்டு வாடாதே
வரும் தடைகள் கண்டு அஞ்சாதே
ஒரு நாள் வெல்வாய் போராடு
ஓலம் ஒழியும் நீ ஓடு

விட்ட தவறை ஆராய்வாய்
விரைந்து தீர்வு காண்பாய்
வெற்றி இன்று அழைக்கும்
வெடி கொளுத்தி பார் மகிழும்

உலகம் உன்னை மொழியும்
உயிரே என்று பாடும்
இறந்தும் நீயே வாழ்வாய்
இது தான் வேண்டும் காண்பாய்

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 26-06-2020

நமது பேஸ்புக் கவிதை குழுவில் இணைய பார்க்க இதில் அழுத்துங்க

Author: நிருபர் காவலன்