முடிந்தால் வென்று பார் …!

முடிந்தால் வென்று பார்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

முடிந்தால் வென்று பார் …!

தொங்கும் பதாகையில்
தொல்லை நீங்கிடுமா ..?
தங்கள் மொழி வாக்கு
தமிழரில் பலித்திடுமா ..?

கருணை அம்மானே
காட்டி கொடுத்தவரே
வீடுகள் தேடுகின்றீர்
விவரம் என்னாச்சு ..?

அறிவில் பூத்தவராம்
அகிலத்தில் மூத்தவராம்
தொங்கும் பட்டியலில்
தொலையா இருப்பவராம் ….

கறுப்பு கண்ணாடி
கலராய் முன்னாடி
இருட்டாய் தெரிகிறதா ..?
இல்லை ஏதோ புரிகிறதா ..?

வதை பட்டார் இழப்பீடு
வாங்கி சென்று விடு
வெற்றி மகனா …?- எங்கே
வென்று காட்டி விடு ….!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 23-06-2020

முடிந்தால் வென்று பார்
முடிந்தால் வென்று பார்

Author: நிருபர் காவலன்