பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்வேட்பாளர் சலீம்

பொதுமக்களின் பிரச்சினைகளை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்வேட்பாளர் சலீம்

பிரதேச செயலாளராக பணிபுரிந்த காலத்தில் பொதுமக்களின் விடயங்களை நேரடியாகக் கையாண்டு அவற்றுக்கு தீர்வைப்

பெற்றுக் கொடுத்தவன் என்ற வகையில் எதிர்காலத்தில் சகல தரப்பு மக்களினதும் பிரச்சினைகளையும் முறையாக அணுகி

அவற்றுக்காக பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக

தேசிய காங்கிர ஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் உள்ள வேட்பாளரின் தேர்தல் நடவடிக்கை செயலகத்தில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளைச் பேசிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் பிரதேச செயலாளராக பணியாற்றிய காலத்தில், பொதுமக்களின் தேவை நிமிர்த்தம் என்னைச் சந்திக்க

வருபவர்களை நேரடியாக சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தேன். இதனாலேயே எனது சேவைக்காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது.

அதேபோல, நான் பாராளுமன்ற உறுப்பினராக இறைவன் உதவியால் தெரிவு செய்யப்படுகின்றபோது அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல மக்களினதும் தேவைகளை அறிந்து

அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளேன். பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள மாவட்டங்களைப் போல்

அம்பாறை மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்து இந்த மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை தான் குறிக்கோளாகக் கொண்டு அரசியலுக்கு வந்துள்ளேன்.

தேர்தல் காலத்திற்கு மாத்திரம் வந்து உரிமை பற்றிப்பேசி அவற்றை வைத்து மக்களின் வாக்குகளை சூறையாடி தங்களை அபிவிருத்தி

செய்து கொண்டுள்ள போலியான அரசியல்வாதிகளைப் போல் அல்லாது ஒரு நேர்மையான அரசியல் கலாசாரத்தினை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Author: நிருபர் காவலன்