ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்

ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.

ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்


1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள்

அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி

வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி,’ ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:

“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2,’ ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42

வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

பத்ரி வெங்கடேஷ்

ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா,

ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள்

அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி

விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.

Spread the love

Author: நிருபர் காவலன்