ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்

ஆளுமை மிக்க தலைமையை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்

நேற்றைய தினம்(26) அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவர் சிறந்த

தலைவர் மலையக மக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழிகாட்டி அவருடைய இடம் இனி வெறுமையாகவே இருக்கும் மலையக மக்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது

இலங்கை அரசியல் வரலாற்றில் சிறந்த அரசியல் வாதியும் ,முன்னாள் அமைச்சரும்,தொழிலாளர் காங்கிறஸ்

தலைவரும்,மலையக மக்களின் உரிமைக்குரலாக இவ்வளவுகாலமும் ஓயாது ஒலித்துவந்த குரல் சற்று ஓய்ந்துள்ளது

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இழப்பு மலையக மக்களுக்கு பேரிழப்பு அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் தனது மக்களுக்காக கடுமையாக உழைத்துள்ளார்

மலையக அரசியல் அரங்கில் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இடம் வெறுமையாகவே காணப்படும் மலையக மக்களின்

சம்பளப்பிரச்சனை உட்பட பல்வேறுபட்ட பிரச்சனைகளின் போது அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதாகவும் துனிச்சல்

மிக்கதாகவும் இருந்திருக்கிறது அமரர் தொண்டமான் அவர்களின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை

தெரிவித்துக் கொள்வதாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்திருந்தார்

Author: நிருபர் காவலன்