சொல்லாமல் வந்த காதல் .!

காதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சொல்லாமல் வந்த காதல் .!

பெற்றவரை நீ இழந்து
பேரழகே வாடையில…..
நெஞ்சமெலாம் வேகுதடி
நினைவிழந்து சாகுதடி……

ஒற்றையிலே நீ இருந்து
ஓரமா அழுகிறியே ….
சாத்தியமா உனை காக்க
சம்பந்தம் செய்யலேயே …..

தேடி வந்த வேளையிலே – என்
தேதியில நீ இல்ல …
வேரறுத்து போகையில- நீ
வேறாகி போனாயே …

தங்கிட தான் துடித்தேண்டி
தவமாய் தவித்தேண்டி …
விதி வந்து விளையாட
விலகி நீ போனாயே …

இன்ரழுது துடித்தேண்டி
ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
என்னழகே உனை தேற்றிடவே
என்ன யான் செய்திடுவேன் …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/05/2019

Home » welcome to ethiri.com » சொல்லாமல் வந்த காதல் .!

Author: நிருபர் காவலன்