காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
நயன்தாரா


நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.

10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த

பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு

பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்

என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்

அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

நயன்தாரா

அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது

அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து

பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்

என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த

Author: நிருபர் காவலன்