விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம்
Spread the love

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

மகிழ்ச்சியில் விவசாயிகள்

இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .

ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.

தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .

இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்

அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .

பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.