ரஷ்ய ஏவுகணை தளம் அழிப்பு உக்கிரேன் இராணுவம்

Spread the love

ரஷ்ய ஏவுகணை தளம் அழிப்பு உக்கிரேன் இராணுவம்

உக்கிரேன் நாட்டின் மீது இராணுவ தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய இராணுவத்தின் ஏவுகணை மாற்று டாங்கி தளம் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

உக்கிரேனின் Snihurivka, Blahodatne, Olhany, பகுதியில் நிலை நிறுத்த பட்டிருந்த ரஷ்ய இராணுவத்தின் ஏவுகணை மற்றும் டாங்கி தரிப்பு ஆயுத மையங்கள் தமது வான் தாக்குதல் மூலம் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து தமது நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய இராணுவம் தமது நாட்டின் முக்கிய சொத்துக்களை திருடி செல்வதாக உக்கிரேன் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது .


உக்கிரேனது நாட்டின் பொருளாதார செல்வ செழிப்பை அழித்து அந்த நாட்டை தொடர்ந்து ரஷ்ய இராணுவம் சூடு காடாக்கிய வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவத்தின் இந்த செயல்களுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் ஆயுத உதவி மற்றும் உளவுத்துறை அரசியல் ஆதரவுடன் உக்கிரேன் இராணுவம் தொடந்து போரிட்டு வருவதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ரசியா இராணுவம் தற்போது உக்கிரேன் மீதான ஏவுகணை தாக்குதல் சூட்டை அதிகரித்துள்ளது .

ரஷ்ய ஏவுகணை தளம் அழிப்பு உக்கிரேன் இராணுவம்


உக்கிரேன் மீதான போருக்கு நாள் தோறும் முன்னூறு மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவு செய்ய படுகிறது என ரஷ்ய தெரிவித்து இருந்தது .

அவ்விதமான மிக பெரும் போர்க்களமாக உக்கிரேன் மாற்றம் பெற்றுள்ளது .


உக்கிரேன் இராணுவம் அவர் தம் இராணுவ பலத்தில் எண்பது வீதம் முடக்க பட்ட நிலையில் செய் அல்லது செத்துமடி என்கின்ற தாக்குதலையே நடத்திய வண்ணம் உள்ளது .

உக்கிரேன் இராணுவம் எதுவரை தாக்கு பிடிக்கும் ,ரஷ்ய மேற்கொள்ள போகும் அடுத்து வரும் நாட்களில் அமைய போகும் முரட்டுத்தனமான தாக்குதல் எவ்வாறு எதிர் கொள்ள போகிறது ..?

ரஷ்ய இராணுவத்தால் ஏற்படும் இழப்புகளை உக்கிரேன் எவவாறு சமாளிக்க போகிறது என்பதே உக்கிரேன் ரஷ்ய போர்முனை களத்தில் ஏற்படும் நிலவரங்களின் நிகழ்வுகளை படம் பிடிப்பவர்கள் கருத்தியலாக உள்ளது .

தொடரும் கொடிய போர் என்று முடிவுக்கு வரும் ,உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்று தீரும் ..?

மக்கள் நின்மதியான் வாழ்விற்கு என்று திரும்ப கூடும் இதுவே உலக மக்கள் கேள்வியாக உள்ளது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply