ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்
Spread the love

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் ,கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கவா பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பொழுது இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ரயில் மீது கல்வீச்சு நடத்தியது யார் ..?

ரயில் கண்ணாடிகளை உடைத்து கற்கள் சேதமாகிய பொழுது கநடைகள் உடைந்து துகள்கள் பறந்துள்ளன .

எனினும் மக்கள் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒருவரின் கால்களுக்கு முன்னால் கல் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பயணிகள் மீது கண்ணாடி துண்டுகளையும் வீசப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைகளை ,குற்றப் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மதுபோதையில் ரயிலை செலுத்தி சென்ற ரயில் சாரதி அந்த இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிய நிலையில் அவரை மக்கள் துரத்தி பிடித்திருந்தனர் .

தொடரூந்து மீது தாக்குதல் நடத்தியதன் பின்புலம் என்ன ..?

அந்த சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியால இடைவெளியில் தற்பொழுது பயணிகள் ரயில் மீது கல் வைத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அதிகமான பயணிகளை காவி செல்கின்ற ரயில் மீது இவ்வாறான கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பதும் , இவ்வாறான பெரிய கற்களை கொண்டு எவ்வாறு அந்த ரயில் மீது இவர்களால் தக்க முடிந்தது என்ற விசாரணைகள் ஆரம்ப[ஆரம்பிக்க பட்டுள்ளன .

தாக்குதலை நடத்திய குறித்த நபரை கைது செய்தால் மட்டுமே ,அவர் ஏன் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

நாள்தோறும் இவ்வாறான வன்முறைகள் சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் போதைவஸ்து பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுவதுடன் ,போலீசாறுடைய அலட்சியின்மையும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ரயில் கல்வீச்சு சம்பவம் பொது பயன்பாட்டில் ஈடுபடுகின்ற ,மக்கள் நடமாட்டத்திற்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக இதனை பார்க்க முடிகிறது .