முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
Spread the love

முட்டை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது முட்டையின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஆளுமரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது .

முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் முட்டை கோழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரா இவ்வாறு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 50 ரூபா

இலங்கையில் இப்பொழுது ஒரு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை உற்பத்தியை அதிகரிக்கின்ற பட்சத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அளவு முட்டை கிடைக்கும் எனவும் அதுவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார் .

அதனால் விவசாய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது தொழில் முனைவோர்களுக்கு கோழிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முட்டை குருமா செய்வது எப்படி - தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL
முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழி முட்டை கோழிகள் வழங்குவதன் ஊடாக ,இலங்கையில் முட்டையினுடைய தன்னிறை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகிறது .

அதன் அடிப்படையில் இந்த கோழிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்கு தமது அரசு திட்டங்களை தீட்டி வழி நடத்த உள்ளதாக விவசாய அமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார் .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் நலத் திட்டங்களை ,அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்து வருகிறது இலங்கை ஆளும் ரணில் அரசு.