மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
Spread the love

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.

அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.

இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.