பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
Spread the love

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .

இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அரச பேரூந்து

அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .

பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .

பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.

பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .

மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .

நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.