கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது
Spread the love

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது ,போதவஸ்து கடத்திய இரண்டு சிங்கள கடலோர கடற்படை சிப்பாய்கள் கைது.

இலங்கை ராணுவத்தின் இரண்டு கடற்படை புலனாய்வுத்துறை சிப்பாய்கள் இருவர் போத வஸ்து கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

கைது செய்யப்பட்ட இருவரும் பாரியளவிலான போதவஸ்து கடத்தலில் ஈடுபட்டதாகவும் ,அதனால் கடற்படையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதிகரிக்கும் போதைவஸ்து கடத்தல்

தமது இராணுவ கட்டமைப்புக்கு மீறி ,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் .

கண்டிப்பாக அவர்களது பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போதவஸ்து கடத்தலின் பின்புலத்தில் ,அரசியல்வாதிகள் மற்றும் இவ்வாறான ராணுவ போலீசார் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாடசாலைகள் முதல் வீதியில்பிச்சை எடுக்கும் நபர் வரை ,போதைவஸ்து அதிகமாக ஊட்டப்பட்டு ,அதன் ஊடாக ஒரு வளர்ந்து வருகின்ற சமுதாயம் திசை திருப்பப்பட்டு இலங்கை ஒரு போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .

போதை நாடக மற்றம் பெறும் இலங்கை

இலங்கையினுடைய ஊடகங்கள் யாவிலும் தலைப்புச் செய்திகளாக போதவஸ்து தொடர்பான தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன.

இலங்கை மிகவும் கொடிய அபாயகரமான போதபஸ்து நாடு என்ற பட்டியலில் எதிர்வரும் 5 ஆண்டுகளில் இடம் பிடித்து விடுமோ என்கின்ற அச்சம் இதன் ஊடாக காணப்படுகின்றது.

பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொழுதும்.

இவ்வாறான போதை வைத்து கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை .

எவ்வாறு இந்த மிகப்பெரும் அதிக விலையிலான போதை வஸ்துக்கள் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகிறது என்பது தொடர்பாக கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடவில்லை.

என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆதலால் இந்த போதைவஸ்து கடத்தல் பின்புலத்தில், இலங்கையில் மிகப்பெரும் அரசியல்வாதிகளுடைய கரங்கள் ,பதுங்கி இருப்பதாகவே மக்கள் மன்றத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது.