ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்

Spread the love

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற பதாகைகள் வைக்கும்படி பெட்ரோல் பங்க்குகளுக்கு போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை – பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு

ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை சென்னையில் உள்ள அனைத்து

பெட்ரோல் பங்க்குகளிலும் காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை ஆணையர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தற்போது சென்னையில் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளார்

Author: நலன் விரும்பி

Leave a Reply