வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்


வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி நேற்று 4 பேர் பலியாகினர். இதையடுத்து, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான

பெரிய விலங்குகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய விலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

25 மாவட்டங்களை சேர்ந்த13 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 273 நிவாரண முகாம்களில் 27 ஆயிரத்து 452 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தனர்.

வெள்ளத்தில் மிதக்கும்
வெள்ளத்தில் மிதக்கும்