விமான நிலையம் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு – உத்தரபிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு


விமான நிலையம் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு – உத்தரபிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு

அயோத்தியில் விமான நிலையம் கட்ட உத்தரபிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் விமான நிலையம் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு – உத்தரபிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
லக்னோ:

உத்தரபிரதேச மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது, யோகி ஆதித்யநாத் அரசின் 4-

வது பட்ஜெட்டாகும். நிதி மந்திரி சுரே‌‌ஷ் குமார் கன்னா, ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 860 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், அயோத்தியில் விமான நிலையம் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியை சுற்றுலா

தலமாக மேம்படுத்த ரூ.85 கோடியும், அங்குள்ள துளசி சமரக் பவனை புனரமைக்க ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கலாசார மையம் அமைக்க ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் கோவிலை விரிவாக்கம் செய்யவும், அழகுபடுத்தவும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைலா‌‌ஷ் மானசரோவர் யாத்திரைக்கு மானியமாக ரூ.8 கோடியும், சிந்து தரிசனத்துக்கு ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.