விமானத்தை ஓடுதளத்தில் சரியாக தரையிறக்காத விமானிகள் சஸ்பெண்ட்


விமானத்தை ஓடுதளத்தில் சரியாக தரையிறக்காத விமானிகள் சஸ்பெண்ட்

மங்களூர் விமான நிலையஓடுதளத்தில் விமானத்தை சரியாக தரையிறக்காமல் பயணிகளுக்கு ஆபத்தை

ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 2 விமானிகள் நான்கரை மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கர்நாடகா: விமானத்தை ஓடுதளத்தில் சரியாக தரையிறக்காத விமானிகள் சஸ்பெண்ட்


ஸ்பைஸ் ஜெட் விமானம் (கோப்பு படம்)
மங்களூர்:

துபாயில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பைஸ் ஜெட்

விமானம் ஒன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.

அந்த விமானம் மங்களூரு விமான ஓடுதளத்தில் மிகவும் அபாயகரமான முறையில் தரையிறங்கியது. இதனால்

ஓடுதளத்தில் இருந்த மூன்று தரையிறக்க வழிகாட்டி விளக்குகள் சேதமடைந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் முடிவில் அந்த விமானத்தை இயக்கிய ஸ்பைஸ் ஜெட் விமானிகள் இருவரும் பயணிகளின்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விமானத்தை மங்களூரு ஓடுதளத்தில் தரையிறக்கியது தெரியவந்தது.

இதையடுத்து விமானிகள் இருவரும் நான்கரை மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான

போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் சம்பவம் நடைபெற்ற அக்டோபர் 31-ம் தேதி

முதல் செயல்பாட்டில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.