வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி


வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?
ஜூலி


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம்

படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

ஜூலி

இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்

பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான

செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது

திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.